பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினரிடமிருந்து பின்தொடர்தல் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
உங்கள் குழுக்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திடுங்கள், உங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்
உங்கள் பணியாளர்கள் எங்கு பணிபுரிந்தாலும் அவர்கள் பயணங்களைக் கோருவதையும் உணவை ஆர்டர் செய்வதையும் ஆதரவை அணுகுவதையும் எளிதாக்குகிறோம்.
சிறந்த நிறுவனங்கள் எங்கள் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன?
வணிகப் பயணத்தை எளிதாக்குங்கள்
அவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் சரி, நகரத்தின் எந்த இடத்திலும் நடக்கும் வாடிக்கையாளர் சந்திப்பாக இருந்தாலும் சரி, 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உங்கள் ப ணியாளர்கள் பயணங்களைக் கோரலாம்.
பணியாளர்களுக்கு உணவுக்கான சலுகைகளை வழங்குதல்
உள்ளூர் உணவகங்களிலிருந்து உங்கள் குழுவினர் ஆர்டர் செய்துகொள்ள அனுமதிப்பதன் மூலம், அவர்களின் உத்வேகத்தைக் கூட்டி, செயல்திறனை மேம்படுத்திடுங்கள். பட்ஜெட் மற்றும் நாளின் நேரத்திற்கான அனுமதிகளை அமைப்பது எளிது.
கம்யூட் நன்மைகளை மேம்படுத்தலாம்
உங்கள் குழுவை உற்பத்தித் திறனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க, கம்யூட் திட்டத்தை உருவாக்குங்கள். இதை அதிகாலை, நிறைவு நிலைப் பயணங்கள் மற்றும் பின்னிரவுப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆவணங்களை எளிதாக டெலிவரி பெறுங்கள்
நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் Uber மூலம் ஒப்பந்தங்களை உடனுக்குடன் உள்ளூரில் டெலிவரி பெறலாம். பயணத்திற்குக் கோரிக்கை செய்வது போன்றே இது எளிதானது விரைவானது.
வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்துங்கள், மகிழ்ச்சிப்படுத்துங்கள்
வாடிக்கையாளர்களின் வணிகத்துக்கு பாராட்டைத் தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு வவுச்சர்களை வழங்கலாம். இதன் மூலம் அவர்கள் சுவையான உணவை டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.
சிறந்த பணியாளர்களுக்கு வெகுமதி அளியுங்கள்
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பயணங்களுக்கும் உணவுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய பரிசு அட்டைகளின் மூலம் சிறப்பாகப் பணிபுரிந்த பணியாளர்களை அங்கீகரிக்கலாம்.
“எங்கள் பணியாளர்கள் சிலர் சாலைப் பயணத்துக்காகச் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடும்போது, Uber for Business தளம் கணிசமான நேரத்தைச் சேமிக்கிறது.”
மேட்டி யல்லாலி (Mattie Yallaly), கார்ப்பரேட் டிராவல் அண்ட் எக்ஸ்பென்ஸ் மேனேஜர், Perficient
உங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிப்பதற்கான மேம்பட்ட அம்சங்கள்
செலவிடல் நிர்வாகத்தைத் தன்னியக்கமாக்கல்
SAP Concur போன்ற முன்னணிச் செலவிடல் நிர்வாகச் சேவை மென்பொருள் வழங்குநர்களுடன் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம், எனவே செலவுகளைத் தானாகவே செயலாக்க இயலும். பணியாளர்கள் ரசீதுகளைத் தேடிச் சிரமப்படும் பிரச்சனை இனி இல்லை.
உங்கள் திட்டங்களைத் தனிப்பயனாக்குங்கள்
நாள், நேரம், இருப்பிடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பயணம் மற்றும் உணவு வரம்புகளை அமைக்கலாம். வெவ்வேறு குழுவினருக்கு ஏற்ப அமைப்புகளை எளிதாக மாற்றியமைத்துக் கொள்ளலாம் (எ.கா., பிரீமியம் பயண விருப்பங்களுக்கான அணுகலை நிர்வாகிகளுக்கு வழங்குதல்).
ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்
மாதாந்திர அறிக்கைகள் மூலம் உங்கள் குழுவினரின் செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையைப் பெறலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் பயணம் மற்றும் உணவுக் கொள்கைகளையும், அடிப்படைக் காரணிகளையும் மேம்படுத்தலாம்.
பிஸியான குழுக்கள் ஏன் Uber for Business-ஐ விரும்புகின்றன?
தனிப்பட்ட செலவுகளையும் வணிகச் செலவுகளையும் வேறுபடுத்துங்கள்
Uber மற்றும் Uber Eats ஆப்களில் தங்கள் வணிகச் சுயவிவரப் பக்கத்துக்கு மாறுவதன் மூலம் தனிப்பட்ட கட்டணங்களையும், வணிகம் தொடர்பான கட்டணங்களையும் பணியாளர்கள் தனித்தனியாகப் பராமரிக்கலாம்.
உலகெங்கிலும் ஒரே ஆப்பைப் பயன்படுத்தலாம்
70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் எங்கள் ஆப் கிடைக்கிறது, இது உலகம் முழுவதும் பயணங்களைக் கோருவதையும் உணவை ஆர்டர் செய்வதையும் எளிதாக்குகிறது.
பிரத்தியேக ஆதரவை அணுகிடுங்கள்
உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் 24/7 உதவத் தயாராக உள்ளோம். எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ சிக்கலைச் சரிசெய்ய உதவி தேவைப்பட்டாலோ, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
கண்ணோட்டம்
எங்களைப் பற்றி
தயாரிப்புகள்
தீர்வுகள்
பயன்பாட்டு பதிவு மூலம்
நிறுவனங்கள் மூலம்
வாடிக்கையாளர் சேவை
ஆதரவு
ஆதார வளங்கள்
அறிந்து கொள்ளுங்கள்