Uber மூலம் விமான நிலையப் பயணங்கள் சிறப்பாக உள்ளன
உலகெங்கிலும் உள்ள 700 -க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்குப் பயணத்தைக் கோருங்கள். பெரும்பாலான பிராந்தியங்களில், விமான நிலையத்தில் பிக்அப் அல்லது டிராப்ஆஃப் -ஐ முன்கூட்டியே திட்டமிடுவதற்கான விருப்பத் தேர்வு உங்களுக்கு கிடைக்கும்.
முன்கூட்டியே உங்கள் விமான நிலையப் பயணத்தை முன்பதிவு செய்யுங்கள்
90 நாட்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிடுவதன் மூலம் விமான நிலையத்திற்கு சென்று திரும்பும் பயணத்தில் ஏற்படும் தேவையில்லாத மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
விமான நிலையத்திற்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்
Uber ரிசர்வ் முன்னுரிமை பொருத்துதல், உங்களுக்குத் தேவைப்படும்போது பயணத்தைப் பெற உதவுகிறது.*
நீங்கள் தரையிறங்கும்போது உங்களுக்காக ஒரு பயணம் காத்திருக்கிறது **
உங்கள் விமானம் தாமதமாகிவிட்டதா (அல்லது முன்கூட்டியே வந்துவிட்டதா) என்பதை எங்கள் விமானக் கண்காணிப்புத் தொழில்நுட்பம் உங்கள் ஓட்டுநருக்குத் தெரிவிக்கும், இதன் மூலம் அவர்கள் தங்கள் பிக்அப் நேரத்தை அதற்கேற்ப சரிசெய்ய முடியும்.
நெகிழ்வான ரத்துசெய்தலுடன் முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்
பயணத்தை முன்பதிவு செய்யும் போது உள்ள விலையை இறுதி செய்யுங்கள். உங்கள் திட்டங்கள் மாறினால், திட்டமிடப்பட்ட பிக்அப் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பு வரை இலவசமாக ரத்துசெய்யலாம்.
விமான நிலையப் பயணங்களைப் பற்றிய முக்கியக் கேள்விகள்
- விமான நிலையப் பயணத்திற்கு எவ்வளவு செலவாகும்?
பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, சுங்கக் கட்டணங்கள், பயணத்தின் தூரம்/கால அளவு மற்றும் தற்போதைய தேவை போன்ற பல காரணிகளைச் சார்ந்து இருக்கும்.
நீங்கள் கோருவதற்கு முன் விலை மதிப்பீட்டைப் பெற, நீங்கள் இங்கே சென்று உங்கள் பிக்அப் இடம் மற்றும் இறங்குமிட விவரங்களை நிரப்பலாம். நீங்கள் பயணத்தைக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப் -இல் உண்மையான கட்டணம் புதுப்பிக்கப்படும்.
- விமான நிலையப் பயணங்களுக்கு என்ன வாகனங்கள் கிடைக்கின்றன?
Down Small கிடைக்கும் பயண விருப்பங்கள் உங்கள் இருப்பிடம் மற்றும் விமான நிலைய விதிமுறைகளைப் பொறுத்தது. மிகவும் துல்லியமான தகவல்களை uber.com/go -க்குச் சென்று உங்கள் பிக்அப் மற்றும் இறங்குமிடங்களை உள்ளிடுவதன் மூலம் பார்க்கலாம்.
- எனது லக்கேஜ் அனைத்திற்கும் காரில் இடமிருக்கிறதா?
Down Small லக்கேஜ் திறன் வாகன மாதிரி, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் கோரும் பயண விருப்பத ்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, ஒரு UberX பயணத்தில் வழக்கமாக 2 சூட்கேஸ்களை வைத்துக் கொள்ள முடியும், அதே நேரத்தில் ஒரு UberXL பயணத்தில் பொதுவாக 3 சூட்கேஸ்களை வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு ஓட்டுநருடன் இணைக்கப்பட்டவுடன், பயணத்தை உறுதிப்படுத்த ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- விமான நிலையத்திற்குச் சென்றுவர Uber -இல் பயணத்தை முன்பதிவு செய்யலாமா?
Down Small பெரும்பாலான விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட இறங்குமிடங்கள் கிடைக்கின்றன. இருப்பினும், முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட பிக்அப்கள் விமான நிலைய விதிமுறைகளுக்கு உட்பட்டவை. கீழே உள்ள பட்டியலில் உங்கள் விமான நிலையத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
- நான் தரையிறங்கிய பிறகு எந்த நேரத்தில் பயணம் செய்யக் கோர வேண்டும்?
Down Small தேவைக்கேற்ப பயண சேவையைக் கோருவதற்கு, நீங்கள் தரையிறங்கிய பின், சுங்கச் சோதனைகளை முடித் து (தேவைப்பட்டால்), உங்கள் லக்கேஜை (ஏதேனும் இருந்தால்) சேகரித்த பின்னர் மட்டுமே பயணத்தைக் கோருமாறு பரிந்துரைக்கிறோம். சரியான வருகை வாயிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் உங்கள் ஓட்டுநரைச் சந்திக்க ஆப் -இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் காத்திருப்பு நேரக் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.
- விமான நிலையத்தில் எனது ஓட்டுநர் எனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பார்?
Down Small வெவ்வேறு பயண விருப்பங்கள் வெவ்வேறு சலுகைக் காலங்களைக் கொண்டுள்ளன. UberX, Uber Comfort மற்றும் UberXL ஆகியவற்றின் மூலம் கோரப்பட்ட பயணங்களுக்கு, காத்திருப்பு நேரக் கட்டணங்களைத் தவிர்க்க, உங்கள் ஓட்டுநரை வந்தடைந்த 2 நிமிடங்களுக்குள் சந்தியுங்கள். Uber Black, Uber Black SUV, Uber Premier மற்றும் Uber Premier SUV ஆகியவற்றுக்கு, உங்களுக்கு 5 நிமிடங்கள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு நேரக் கட்டணத் சலுகையைக் கோரலாம்.
Uber ரிசர்வ் உடன் கோரும்போது, உங்கள் விமான அட்டவணை நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து உங்கள் ஓட்டுநருக்குத் தெரிவிக்கப்படும். UberX, Uber Comfort மற்றும் UberXL பயணங்களில், தாமதக் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முன்னதாக, உங்கள் விமானம் வந்து சேர்ந்த பிறகு 45 நிமிடங்களுக்குள் ஓட்டுநரைச் சந்தித்துவிடுங்கள். Uber Black, Uber Black SUV, Uber Premier மற்றும் Uber Premier SUV பயணங்களுக்கு, 60 நிமிடங்களுக்குள் உங்கள் ஓட்டுநரைச் சந்தியுங்கள். Uber ரிசர்வ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
விமான நிலையத்தைக் கண்டறிங்கள்
Asia
இந்தியா
Philippines***
Thailand***
Vietnam***
Indonesia***
Republic of Korea
Malaysia
Myanmar***
ஐரோப்பா
நெதர்லாந்து
Ireland
ஸ்விட்சர்லாந்து
United Kingdom
வட அமெரிக்கா
அமெரிக்கா
South and Central America
Middle East
United Arab Emirates
* வருகை நேரம் ஒரு மதிப்பீடு மட்டுமே; போக்குவரத்து போன்ற Uber-இன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் உண்மையான வருகை பாதிக்கப்படலாம்.
**உங்கள் பயணக் கோரிக்கையை ஓட்டுநர் அக்செப்ட் செய்வார் என்பதற்கு Uber உத்தரவாதம் அளிக்காது. உங்கள் ஓட்டுநரின் விவரங்களை நீங்கள் பெற்ற பிறகே, உங்கள் பயணம் உறுதி செய்யப்படும். ஓட்டுநர் உங்கள் பயணக் கோரிக்கையை அக்செப்ட் செய்திருந்தாலும், விமானம் தரையிறங்கும் நேரத்திற்குச் சரியாக அவர் வந்துவிடுவார் என்பதற்கு Uber உத்தரவாதம் அளிக்காது.
***இந்த விமான நிலையங்களில் பயணங்கள் Grab ஆப் மூலம் கிடைக்கின்றன, இது Uber உடன் தொடர்புடைய நிறுவனம் அல்ல. மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு Uber பொறுப்பேற்காது.