Uber வழங்கும் தொழில்நுட்பங்கள்
மக்கள் எவ்வாறு பயணங்களைக் கோரலாம் மற்றும் ஒரு புள்ளி A-இலிருந்து புள்ளி B-ஐ அடையலாம் என்பதை மாற்றுவது ஒரு தொடக்கம் மட்டுமேயாகும்.
Uber ஆப்கள், தயாரிப்புகள் ம ற்றும் பிற சலுகைகள்
Uber, உலகம் பயணம் செய்யும் விதத்தைச் சிறப்பான முறையில் மாற்றியமைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமாகும். பயணங்களை எதிர்பார்க்கும் நுகர்வோரைப் பயணச் சேவைகளை வழங்கும் சுயாதீன வழங்குநர்களுடன் இணைப்பதுடன் பொதுப் போக்குவரத்து, பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பிற போக்குவரத்து வகைகளுடன் பொருந்தக்கூடிய பலதரப்பு தளங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.
நுகர்வோர் மற்றும் உணவகங்கள், மளிகைக் கடைக்காரர்கள் மற்றும் பிற வணிகர்க ளையும் நாங்கள் இணைக்கிறோம், அதனால் அவர்கள் உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும், பின்னர் நாங்கள் அவர்களை சுயாதீனமான டெலிவரி சேவை வழங்குநர்களுடன் பொருத்துகிறோம். கூடுதலாக, சரக்குத் துறையில் ஷிப்பிங் செய்பவர்களையும் கேரியர்களையும் Uber இணைக்கிறது.
உலகெங்கிலும் உள்ள 70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 நகரங்களிலும் மக்களை இணைக்கவும், அவர்கள் பயணம் செய்யவும் எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.