Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

நமது மக்கள் மற்றும் கலாச்சாரத்தில் முதலீடு செய்கிறோம்

2017 இல், நாங்கள் யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இடைநிறுத்தி, எங்களை நாங்களே பார்த்துக் கொண்டோம். இன்று Uber இருக்கும் நிலையை வடிவமைப்பதில் அது ஒரு முக்கிய தருணமாக இருந்தது. Covington அறிக்கை எதையும் விட்டுவிடாமல், நாங்கள் எதில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்த வணிகத்தின் ஒவ்வொரு மூலையையும் குறிப்பிட்டுக் காட்டியது. இது மறுக்க முடியாத கடினமான உண்மைகளைச் சுட்டிக்காட்டியதோடு தலைமை மேற்பார்வையை மறுவடிவமைப்பு செய்வதற்கும், பணியாளர் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மாற்றுவதற்கும், கலாச்சாரத்தை மறுசீரமைப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கும் Uber முன்னோக்கி செல்வதற்கான பாதையை வழங்கியது. காலப்போக்கில் படிப்படியான மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், Uber நமது கலாச்சாரத்தை மறுகட்டமைத்து மறுவடிவமைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பன்முகத்தன்மை எவ்வாறு நம்மை வலிமையாக்குகிறது மற்றும் உலகை சிறப்பாக நகர்த்துவதற்கு மிகவும் சரிசமமான மற்றும் உள்ளடக்கிய சூழலை உருவாக்க நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

பணியாளர்களுக்கென விருப்பங்கள் இருக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இருக்கிறோம், மேலும் நம்மால் மனநிறைவுடன் இருக்க முடியாது, மற்றவர்கள் செய்வதை நகலெடுக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் எங்களின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாகிய எங்களின் மக்களுக்காக நாங்கள் செய்த முதலீடுதான் மிக முக்கியமான கலாச்சார மாற்றமாகும். Uber உடைமை, நோக்கம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கை உணர்வை வளர்க்கும் சூழலை உருவாக்க தொடர்ந்து செயல்படுகிறது. இந்த ஆண்டின் அறிக்கையை நாங்கள் உருவாக்கியபோது, எங்கள் மக்களையும் கலாச்சாரத்தையும் வடிவமைக்கும் ஆழமான கருத்துகளை வழங்குவதில் கவனம் செலுத்தினோம்.

பன்முகத்தன்மைக்கு தலைமைத்துவத்தின் கடமைகள்

Uber இல் மக்கள்தொகைப் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கும், இனவெறிக்கு எதிரான நிறுவனமாக இருப்பதற்கும், நாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் கூட்டாளியாக மாறுவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் நிர்வாகத் தலைமைக் குழு, இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமும், தங்கள் அணிகளில் பிரதிநிதித்துவத்தைச் சுற்றி முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் மூலமும், இதை உண்மையாக்க தங்கள் பங்கைச் செய்து வருகிறது.

“கடந்த 5 ஆண்டுகளில் முன்னேற்றம் மெதுவாகவும் சாத்தியமற்றதாகவும் இருப்பதாக உணர்ந்த தருணங்கள் உள்ளன. பின்னோக்கிப் பார்த்தால், நமது மாற்றத்தின் வேகம் பிரமிப்படைய வைக்கிறது. பயணம் ஒரு நேர்க்கோட்டில் நடைபெறுவதில்லை, குறிப்பாக அனைத்து பொருளாதார, சமூக மற்றும் சந்தை மாற்றங்களுடன் இது சாத்தியமில்லைதான், ஆனால் இது முக்கியமான ஒன்றாகும். தேவைப்படும்போது பாதையை சரிசெய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இப்போது, குறிப்பாக, உலகம் முன்னெப்போதையும் விட பிரிவினைப்படுத்தப்பட்டதாகவும், அமைதியற்றதாகவும் தோன்றுவதால், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை முன்னேற்றுவதற்கு நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது.

போ யங் லீ, தலைமை D&I அதிகாரி

"எங்கள் நோக்கம் மற்றும் மதிப்புகள் எங்களை ஒரு அமைப்பாக இயங்க செய்கின்றன, இதில் நாங்கள் யாரை ஈர்க்கிறோம் மற்றும் தக்கவைக்கிறோம் என்பதும் அடங்கும். எங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு, எங்கள் மதிப்புகளைப் பகிர்ந்துகொள்பவர்கள் எங்களுடன் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எனவே இதனால் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையின் சிறந்த வேலையைச் செய்வதோடு உலகில் ஒரு உண்மையான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும். ஆனால் ஒருபுறம் ஒரு கட்டாய பணியும் வலுவான மதிப்புகள் மட்டும் இருந்தால் போதாது - அவை எங்கள் பணியாளர்களின் அன்றாட அனுபவத்தில் உயிர்ப்பெறவும் வேண்டும். பணியாளர்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு அடி முன்னேற்றத்திலும் எங்கள் மதிப்புகளை அனுபவிப்பதை உறுதிசெய்ய எங்கள் நிறுவனம் முழுவதும் நாங்கள் பணியாற்றி வருகிறோம், ஒரு தனிநபராகவும் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் அவர்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்கிறோம். எங்கள் பணியாளர்களும் எங்கள் வணிகமும் செழிக்க உதவும் ஒரு சூழலமைப்பை வடிவமைப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்.

நிக்கி கிருஷ்ணமூர்த்தி, தலைமை மக்கள் அதிகாரி

எங்கள் பணிக்குழு புள்ளிவிவரங்கள்

Uber இல், நமது மக்கள்தொகைத் தரவைக் கண்காணிப்பதில் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம், மேலும் உலகளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும், ஆண்டுக்கு ஆண்டு அமெரிக்காவில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட நபர்களின் (URP) பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் பொறுப்பினைக் கொண்டிருக்கிறோம். அதிகரிக்கும் ஆதாயங்கள் எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருப்பதில்லை, ஆனால் எங்கள் இயக்குநர்கள் குழுவுடன் இணைந்து குறிகாட்டிகள் மற்றும் தொடர்புடைய முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

உலகளாவிய பிரதிநிதித்துவம்¹

பணிக்குழு பன்முகத்தன்மை (உலகளவில்)

%ஆண்கள்%பெண்கள்

பணிக்குழு பன்முகத்தன்மை (அமெரிக்கா)

%ஆசியர்கள்
%ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
%ஹிஸ்பானியர்கள் அல்லது லத்தீன்
%பூர்வீக ஹவாய் அல்லது பிற பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள்
%அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீகக்குடியினர்கள்

பணிக்குழு பன்முகத்தன்மை (பிராந்திய)

%ஆண்கள்%பெண்கள்

தலைமைத்துவ பிரதிநிதித்துவம்

பணிக்குழு பன்முகத்தன்மை (உலகளாவிய)

%ஆண்கள்%பெண்கள்

பணிக்குழு பன்முகத்தன்மை (அமெரிக்கா)²

%ஆசியர்கள்
%ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
%ஹிஸ்பானியர்கள் அல்லது லத்தீன்
%பூர்வீக ஹவாய் அல்லது பிற பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள்
%அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீகக்குடியினர்கள்

புதிய Hire களின் பிரதிநிதித்துவம்

புதிய Hire களின் பிரதிநிதித்துவம்

%ஆண்கள்%பெண்கள்

புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் இனப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் %

%ஆசியர்கள்
%ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
%ஹிஸ்பானியர்கள் அல்லது லத்தீன்
%பூர்வீக ஹவாய் அல்லது பிற பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள்
%அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீகக்குடியினர்கள்

¹எண்கள் பின்வரும் தேதிகளில் மக்கள்தொகை தரவுகளை பிரதிபலிக்கின்றன: 2022 டிசம்பர் 31, 2021 நிலவரப்படி; 2021 மார்ச் 31, 2021 நிலவரப்படி; 2020 ஆகஸ்ட் 31, 2020 நிலவரப்படி; 2019 மார்ச் 31, 2019 நிலவரப்படி. முந்தைய ஆண்டுகளுக்கான பணியாளர் பிரதிநிதித்துவ தரவு தொடர்பான கூடுதல் தகவல்களை அந்தந்த அறிக்கைகளில் காணலாம். காலத்திட்டங்கள் மற்றும் வகை வரையறைகள் தொடர்பான தகவல்கள் உட்பட, மேலும் மக்கள்தொகை தரவுகளுக்கு, தயவுசெய்து எங்களின் முழுமையான மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கையைப் பார்க்கவும்.

முந்தைய மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கைகள்

ஒவ்வொரு ஆண்டும், மனித மூலதன மேலாண்மை; பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்; மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கான எங்கள் அணுகுமுறையைப் பகிர்ந்து கொள்வதற்காக எங்கள் மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கையை வெளியிடுகிறோம். புதுப்பிக்கப்பட்ட பிரதிநிதித்துவத் தரவை நாங்கள் பகிர்ந்து கொள்வதோடு எங்கள் இலக்குகளை நோக்கி நாங்கள் எவ்வாறு முன்னேறுகிறோம் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறோம். எங்கள் பணியாளர் தரவு மற்றும் மனித மூலதன நடைமுறைகளைச் சுற்றி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான எங்கள் அணுகுமுறையின் முக்கிய அங்கமாக இந்த அறிக்கை உள்ளது. எங்கள் கடந்த ஆண்டுகளின் முழு அறிக்கைகளுக்கான அணுகலுக்கு கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

1/4
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو