பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்
மாறுபட்ட தளத்திற்கு சேவை செய்ய பன் முகத்தன்மை கொண்ட குழுக்களை உருவாக்குதல்
Uber தளத்தில், ஒரு நாளைக்கு எங்களின் 19 மில்லியன் பயணங்களில் பல்வேறு நபர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சமூகங்களுக்கு திறம்பட சேவையளிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகளை உருவாக்கி, எங்கள் வணிகத்தை நடத்த வேண்டி இருக்கிறது. அதாவது, நாங்கள் செயல்படும் மற்றும் பணியமர்த்தும் சமூகங்களின் பன்முகத்தன்மையை எங்கள் நிறுவனத்திற்குள்ளும் செயல்படுத்த வேண்டும். மேலும் இந்தப் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் ஒரு பணியிடத்தை உருவாக்குவதும், ஒவ்வொருவரையும் இது தங்களுக்கான இடம் என்று உணர வைக்கக் கூடிய, மேலும் எங்களது வெற்றிக்கு அவர்களது பங்களிப்பை வழங்குவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கவேண்டியது அவசியம்.
காலப்போக்கில் படிப்படியான மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், அடிப்படை மாற்றங்களுடன் தொடங்கி, Uber அதன் முழு கலாச்சாரத்தையும் மறுவடிவமைத்துள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, பன்முகத்தன்மையில் கவனம் செலுத்துவது நம்மை ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றுவதையும், நியாயமான மற்றும் உள்ளடக்கிய சூழலை உருவாக்க உதவுவதையும் ஏற்கெனவே நாம் பார்த்து வருகிறோம்.
பன்முகத்தன்மைக்கு தலைமைத்துவத்தின் கடமைகள்
Uber-இல் வேலைவாய்ப்பிற்கான சமமான வாய்ப்புகளை அதிகரிப்பதையும், இனவெறியை தீவிரமாக எதிர்ப்பதையும் மற்றும் நாங்கள் சேவை வழங்கும் சமூகங்களுடன் ஆதரவாகச் செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிர்வாகத் தலைமைக் குழு, தங்கள் அணிகளில் பிரதிநிதித்துவத்தைச் சுற்றி இலக்குகளை அமைப்பதன் மூலமும், தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் மூலமும், இதை உண்மையாக்க தங்கள் பங்கைச் செய்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில், எங்கள் தயாரிப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் மற்றும் எங்கள் தளத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் பகிரங்கமாக உறுதியளித்தோம். இந்த உறுதிப்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், இந்த இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை நிர்வகித்து வருவதோடு தீவிரமாக கண்காணித்தும் வருகிறோம்.
“பயணத்திற்கு உதவும் ஒரு நிறுவனம் என்ற வகையில், உடல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எல்லோரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என்பதை உறுதிசெய்வது எங்கள் குறிக்கோளாகும். அதைச் செய்வதற்கு, சமூகம் முழுவதும் நீடிக்கும் இனவெறியை எதிர்த்துப் போராட நாம் உதவுவதோடு, நமது நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சமத்துவத்திற்கான ஒரு வீரராகவும் இருக்க வேண்டும்.
"ஒரு விஷயம் எங்களுக்குத் தெளிவாக உள்ளது: எங்கள் தயாரிப்புகள் மட்டுமே சமத்துவம் மற்றும் நியாயத்தை மேம்படுத்தும் என்று நம்ப முடியாது. நாம் மாற்றத்தை விரைவாக கொண்டுவர நமது உலகளாவிய நீட்சி, நமது தொழில்நுட்பம் மற்றும் நமது தரவைப் பயன்படுத்த வேண்டும் - இதனால் நாம் மிகவும் தீவிரமான இனவெறி எதிர்ப்பு நிறுவனமாகிறோம்; ஒரு பாதுகாப்பான, மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனமாகவும் தளமாகவும்; நாம் சேவை செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் உண்மையுள்ள நட்பாகவும் மாறுகிறோம்.”
தாரா கோஸ்ரோவ்ஷாஹி, தலைமை நிர்வாக அதிகாரி
பணியாளர் வளக் குழுக்கள்
உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு, Uber இன் பணியாளர் வள குழுக்கள் அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகின்றன.
Uber இல் உடல் குறைபாடு உள்ளவர்கள்
குறைபாடுகளுடன் வாழும் பராமரிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான Uber இன் சமூகம்