பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்
மாறுபட்ட தளத்திற்கு சேவை செய்ய பன்முகத்தன்மை கொண்ட குழுக்களை உருவாக்குதல்
Uber தளத்தில், ஒரு நாளைக்கு எங்களின் 19 மில்லியன் பயணங்களில் பல்வேறு நபர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சமூகங்களுக்கு திறம்பட சேவையளிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகளை உருவாக்கி, எங்கள் வணிகத்தை நடத்த வேண்டி இருக்கிறது. அதாவது, நாங்கள் செயல்படும் மற்றும் பணியமர்த்தும் சமூகங்களின் பன்முகத்தன்மையை எங்கள் நிறுவனத்திற்குள்ளும் செயல்படுத்த வேண்டும். மேலும் இந்தப் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் ஒரு பணியிடத்தை உருவாக்குவதும், ஒவ்வொருவரையும் இது தங்களுக்கான இடம் என்று உணர வைக்கக் கூடிய, மேலும் எங்களது வெற்றிக்கு அவர்களது பங்களிப்பை வழங்குவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கவேண்டியது அவசியம்.
காலப்போக்கில் படிப்படியான மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், அடிப்படை மாற்றங்களுடன் தொடங்கி, Uber அதன் முழு கலாச்சாரத்தையும் மறுவடிவமைத்துள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, பன்முகத்தன்மையில் கவனம் செலுத்துவது நம்மை ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றுவதையும், நியாயமான மற்றும் உள்ளடக்கிய சூழலை உருவாக்க உதவுவதையும் ஏற்கெனவே நாம் பார்த்து வருகிறோம்.
பணியாளர் வளக் குழுக்கள்
உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு, Uber இன் பணியாளர் வள குழுக்கள் அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகின்றன.
Uber இல் உடல் குறைபாடு உள்ளவர்கள்
குறைபாடுகளுடன் வாழும் பராமரிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான Uber இன் சமூகம்