Uber-ஐப் பயன்படுத்தி அணுகல்தன்மை அம்சத்தைப் பெறுதல்
எங்கள் தொழில்நுட்பமும் ஓட்டுநர்களின் மூலம் வழங்கப்படும் பயணங்களும், பல மாற்றுத்திறனாளி நபர்களின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொருவரும் தங்களின் சமூகங்களில் எளிதில் பயணங்களை மேற்கொள்ள உதவும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முனைப்புடன் தொடர்ந்து முயன்று வருகிறோம்.
மாற்றுத்திறனாளிப் பயணிகள்
மாற்றுத் திறனாளிப் பயணிகள் பயணம் செய்வதையும், அவர்களின் சுதந்திரத்தையும் அதிகரிக்க Uber-இன் தொழில்நுட்பம் உதவுகிறது. இதில் பின்வருவன போன்ற அம்சங்களும் திறன்களும் உள்ளன:
ரொக்கமில்லா பேமெண்ட்டுகள்
Uber-இன் கேஷ்லெஸ் பேமெண்ட் விருப்பத்தேர்வு பேமெண்ட் செயல்முறையை எளிதாக்குவதுடன், பணத்தை எண்ணுவதற்கான அல்லது ஓட்டுநருடன் பில்களைப் பகிர்வதற்கான தேவையைக் குறைக்கிறது.
தேவைக்கேற்ப பயணச் சேவைகள்
ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் மாற்றுத்திறனாளிப் பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை Uber ஆப் எளிதாக்குகிறது. அவர்கள் இனி டிஸ்பாட்சர் மூலமாகப் பயணங்களை ஏற்பாடு செய்யத் தேவையில்லை அல்லது பயணங்களைக் கண்டறிவதற்காக மற்றவர்களை நம்பியிருக்கவோ, சுலபமாக இல்லாத வழிகளைப் பயன்படுத்தி பயணங்களைக் கண்டறியவோ வேண்டியதில்லை.
வெளிப்படையான கட்டணம்
பயணத்தைக் கோருவதற்கு முன்பே பயணிகள் தங்களின் பயணக் கட்டணத்தை அறிய உதவும் வகையில் வெளிப்படையான கட்டணத்தை Uber பயன்படுத்துகிறது. இது அவர்களுக்கு மன அமைதியைத் தருவதோடு, மோசடிக்கான அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
பாகுபாட்டுக்கு எதிரான கொள்கைகள்
பயணி கோரிக்கை செய்யும் ஒவ்வொரு பயணமும் Uber ஆப் மூலம் அருகிலுள்ள ஓட்டுநருடன் பொருத்தப்படும். இதனால் சட்டவிரோதமான பாகுபாட்டிற்கு வாய்ப்பே இல்லை. நம்பகமான, கட்டுப்படியாகக்கூடிய கட்டணம் கொண்ட பயணத்தைப் பெறுவீர்கள்.
சேவை விலங்கு குறித்த கொள்கைகள்
கண்பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடுள்ள பயணிகள் மற்றும் சேவை விலங்குடன் பயணிக்கும் பயணிகளுக்குப் பயணங்களை வழங்கும்போது, Uber-இன் சமூக வழிகாட்டல்கள் மற்றும் சேவை விலங்குக் கொள்கையின்படி, சேவை விலங்குகளின் போக்குவரத்து தொடர்பாகப் பொருந்தக்கூடிய அனைத்து விதிகளுக்கும் ஓட்டுநர்கள் இணங்க வேண்டும்.
உங்கள் ETA மற்றும் இருப்பிடத்தைப் பகிருங்கள்
பயணிகள் தங்களின் பயண விவரங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம் (இதில் கூடுதல் மன அமைதிக்காக அன்பானவர்களுடன் வழி, சேருமிடத்தை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் பகிர்வதும் அடங்கும்). நண்பர்களோ க ுடும்ப உறுப்பினர்களோ ஓர் இணைப்பைப் பெறுவார்கள். அதில் ஓட்டுநரின் பெயர், புகைப்படம், வாகனத் தகவல் ஆகியவற்றைக் காணலாம், அத்துடன் சேருமிடத்தைப் பயணி அடையும் வரை நிகழ்நேரத்தில் வரைபடத்தில் அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்காணிக்கலாம்—இவை அனைத்திற்கும் Uber ஆப் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இயக்கரீதியான குறைபாடுகளைக் கொண்ட பயணிகள்
இயக்கரீதியான குறைபாடுகளைக் கொண ்ட பயணிகளுக்கான பயணங்களை இன்னும் அணுகத்தக்கதாகவும் நம்பகமாகவும் ஆக்குவதற்கான தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். இது WAV (சக்கர நாற்காலி அணுகக்கூடிய வாகனங்கள்) சேவையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஓட்ட இயலக்கூடிய வாகனங்கள்
Uber WAV சேவை, மடக்க இயலாத, மோட்டார் மூலம் இயங்கும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகள், சக்கர நாற்காலி செல்லும் வகையில் சாய்வு மேடைகள் அல்லது உயர்த்திகளுள்ள வாகனங்களைக் கொண்ட ஓட்டுநர்களுடன் இணைவதற்கு உதவுகிறது.
உலகம் முழுவதும் கிடைக்கிறது
பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் எந்தச் சக்கர நாற்காலி அணுகல்தன்மை கொண்ட வாகனத் தேர்வுகள் பொருந்தும் என்பதைத் தீர்மானிக்க, உலகெங்கிலும் உள்ள நகரங்களில் (பெங்களூர், பாஸ்டன், சிகாகோ, லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க், பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, டொராண்டோ மற்றும் வாஷிங்டன், டி.சி. உட்பட) பல் வேறு Uber WAV மாடல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
“சக்கர நாற்காலி அணுகக்கூடிய வாகனங்கள் தேவைப்படும் நபர்கள், [Uber WAV]-ஐத் தொடங்கி, ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் தேவைக்கேற்ப பயணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை Uber வழங்குகிறது. மாற்றுத் திறனாளி நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குப் பணிபுரிகின்ற ஒரு நிறுவனமாக, சக்கர நாற்காலி அணுகக்கூடிய வாகனங்கள் தேவைப்படும் எங்களைப் போன்றவர்களுக்காகத் தங்களின் சேவை விருப்பத்தேர்வுகளை அதிகப்படுத்தியதற்காக Uber நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன ்.”
—எரிக் லிப் (Eric Lipp), தலைமை இயக்குநர், Open Doors Organization
"பயணங்களை வழங்குவதில் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களிடம் UberX பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளருக் கான அதிக விருப்பத்தேர்வுகளையும் வாய்ப்புகளையும் வழங்குவதற்கும் அதே நுட்பமான படைப்பாற்றலுடன் Uber முனைப்பு காட்டுவதைப் பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைக்கிறேன்.... சக்கர நாற்காலி அணுகக்கூடிய வாகனங்கள் தேவைப்படுகின்ற நபர்கள், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் பயணங்களைப் பெறுவதை Uber WAV எளிதாக்குகிறது.”
—டோனி கோயல்ஹோ (Tony Coelho), உதவி ஆசிரியர், Americans with Disabilities Act
“இந்த நூற்றாண்டில் எனக்கும் என்னைப் போன்ற பிற கண்பார்வையற்ற நபர்களுக்குமான சுதந்திரத்தில் Uber பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நம்புகிறேன்.”
—மைக் மே (Mike May), முன்னாள் தலைமை இயக்குநர், BVI Workforce Innovation Center, Envision Inc.
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடுள்ள பயணிகள்
Uber ஆப்-இன் முழுமையான செயல்பாட்டிற்கு ஆடியோ தேவையில்லை. கண்ணுக்குப் புலனாகக்கூடிய மற்றும் அதிர்வுறும் விழிப்பூட்டல்கள் போன்ற உதவும் தொழில்நுட்பம், காது கேளாதவர்கள் அல்லது செவித்திறன் குறைபாடுள்ள பயணிகள் Uber ஆப்-ஐ எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது. அத்துடன் சேருமிடத்தை உள்ளிட இயலுதல் போன்ற ஆப் அம்சங்கள், ஓட்டுநரும் பயணியும் வாய்மொழி அல்லாத தகவல் தொடர்பைச் செய்ய உதவுகிறது.
உதவி தேவைப்படக்கூடிய பயணிகள்
Uber-இல், எல்லா இடங்களிலும் அனைவருக்கும் போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான அணுகலை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். கூடுதல் உதவி தேவைப்படுகின்ற நபர்களுக்கு உதவும் வகையில் Uber Assist வடிவமைக்கப்பட்டுள்ளது. Uber Assist மூலம், பயணிகளை வாகனத்தில் ஏற/இறங்க உதவுவதற்காக அதிகத் தரமதிப்பீட்டைக் கொண்ட ஓட்டுநர்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களில் இருந்து தனிப்பட்ட பயிற்சியைப் பெறலாம். Uber Assist தற்போது உலகெங்கிலும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.
மாற்றுத்திறனாளி Uber Eats வாடிக்கையாளர்கள்
கண்பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடுள்ள வாடிக்கையாளர்கள்
iOS வாய்ஸ்ஓவர் மற்றும் Android டாக்பேக் அம்சங்கள் மூலம் கண்பார்வையற்ற அல்லது பார்வைத்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளர்கள் ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்வதை Uber Eats ஆப் எளிதாக்குகிறது. இந்த அணுகல்தன்மை அம்சங்களுடன் Uber Eats ஆப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று பாருங்கள்.
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளர்கள்
Uber Eats ஆப்-இன் முழுச் செயல்பாட்டுக்கு ஆடியோ தேவையில்லை. கண்ணுக்குப் புலனாகக்கூடிய மற்றும் அதிர்வுறும் விழிப்பூட்டல்கள் போன்ற உதவும் தொழில்நுட்பம், காது கேளாதவர்கள் அல்லது செவித்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளர்கள் Uber Eats ஆப்- ஐ எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது. டெலிவரி செய்ய வேண்டிய இடத்தை உள்ளிட இயலுதல் போன்ற ஆப் அம்சங்கள், வாடிக்கையாளரும் டெலிவரி நபரும் வாய்மொழி அல்லாத தகவல் தொடர்பைச் செய்ய உதவுகிறது.
மாற்றுத்திறனாளி ஓட்டுநர்கள்
இயக்கரீதியான குறைபாடுகளைக் கொண்ட ஓட்டுநர்கள்
இயக்கரீதியான குறைபாடுள்ளவர்கள் பொருளாதார ரீதியாகப் பலனடையும் வகையில் சம்பாத்திய வாய்ப்புகளை Uber வழங்குகிறது. மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கைகளால் கட்டுப்படுத்தக்கூடிய கருவிகளைப் பொருத்தியுள்ள வாகனங்களைக் கொண்டுள்ள ஓட்டுநர்களை Uber தளத்திற்கு Uber வரவேற்கிறது. சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட இயலக்கூடிய எவரும் Uber மூலம் வாகனம் ஓட்ட விண்ணப்பிக்கலாம்.
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடுள்ள ஓட்டுநர்கள்
காது கேளாதவர்கள் அல்லது செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பொருளாதார ரீதியாகப் பலனடையும் வகையில் நெகிழ்வான சம்பாத்திய வாய்ப்புகளை Uber வழங்குகிறது. Uber தளத்தில், காது கேட்கும் திறன் கொண்ட ஓட்டுநர்களைவிடக் காது கேளாத மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக அதிகப் பயணங்களை வழங்குகின்றனர். காது கேளாத ஓட்டுநர்கள் தங்களின் சமூகத்தினருக்குப் பயணங்களை வழங்குவதன் மூலம், ஒட்டுமொத்தமாகக் கோடிக்கணக்கான டாலர்கள் சம்பாதித்துள்ளனர்.
2016 செப்டம்பரில், மாற்றுத் திறனாளி நபர்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ள 18 நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக Uber-ஐ ரூடர்மேன் ஃபேமிலி ஃபவுண்டேஷன் (Ruderman Family Foundation) அங்கீகரித்துள்ளது.
“காது கேளாத மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள நபர்களுக்காக, அணுகல்தன்மைத் தொழில்நுட்பத்தை Uber தனது ஆப்-இல் ஒருங்கிணைத்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத வகையில் Uber மூலம் வாகனம் ஓட்டிச் சம்பாதிப்பதற்கான அணுகலைக் காது கேளாத நபர்களுக்கு வழங்குகிறது. சி.எஸ்.டி (Communication Service for the Deaf) உடனான இந்தக் கூட்டாண்மை, காது கேளாத ஓட்டுநர்கள் மக்களுக்கு வாகனப் பயணங்களை வழங்குவதற்கு உதவிடும்—காது கேளாத நபர்களின் திறமைகள் மற்றும் மனிதநேயம் குறித்த புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தி மக்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இது உள்ளது.”
—கிறிஸ் ஸூக்கப் (Chris Soukup), தலைமைச் செயல் அதிகாரி, Communication Service for the Deaf
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடுள்ள ஓட்டுநர்களுக்கான தயாரிப்பு அம்சங்கள்
கூடுதலாக, காது கேளாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன், அமெரிக்காவில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் மிகப்பெரும் இலாப நோக்கற்ற நிறுவனமான Communication Service for the Deaf நிறுவனத்துடன் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம். National Association of the Deaf, Telecommunications for the Deaf and Hard of Hearing (TDI) ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களுடனும் நாங்கள் செயல்பட்டு, ஓட்டுநர் அனுபவத ்தை மேம்படுத்துவதற்காக முற்றிலும் விருப்பத்தேர்விலான தயாரிப்பு அம்சங்களின் ஒரு தொடரை வடிவமைத்துச் செயல்படுத்தியுள்ளோம். அவற்றில் அடங்குபவை:
ஆப்-இல் இந்த அம்சங்களை இயக்குதல்
ஓட்டுநர், தான் காது கேளாதவர் அல்லது செவித்திறன் குறைபாடு உள்ளவர் என்பதை Uber Driver ஆப்-இல் குறிப்பிடலாம். இது ஓட்டுநர்கள் மற்றும் அவரின் பயணிகளுக்குப் பின்வரும் அம்சங்களைத் திறக்கும்.
ஒளிரும் விளக்கு அம்சத்துடன் பயணக் கோரிக்கை
புதிய பயணக் கோரிக்கை பெறப்படும்போது ஒளிரும் விளக்கு மற்றும் ஆடியோ அறிவிப்பின் மூலம் Uber Driver ஆப் அறிவிக்கும். பயணத்தை வழங்கிச் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும்போது, ஓட்டுநர்கள் எளிதில் அறிவிப்புகளைக் காணலாம்.
அழைப்புக்குப் பதிலாக, உரைச் செய்தி மட்டுமே அனுப்பக்கூடிய வசதி
காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடுள்ள ஓட்டுநரை அழைப்பதற்கான அம்சம் பயணிக்கு முடக்கப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக, ஓட்டுநருடன் தகவல்தொடர்பு செய்ய வேண்டியிருந்தால் செய்தியனுப்புமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். இந்த அமைப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அழைப்பைச் செய்ய இயலாததன் காரணமாகப் பயணங்கள் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
பயணியின் சேருமிடத்தை உள்ளிடுவதற்கான அறிவுறுத்தல்
பயணிகள் தங்களின் சேருமிடத்தை உள்ளிடும்படி கூடுதலாக ஓர் அறிவுறுத்தல் ஆப்-இல் காட்டப்படும். இதன்மூலம் ஓட்டுநர் காது கேளாதவர் அல்லது செவித்திறன் குறைபாடு உள்ளவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர ். இந்த அமைப்பைக் கொண்டுள்ள ஓட்டுநர் பயணத்தை அக்செப்ட் செய்தவுடன், சேருமிடத்தைக் குறிப்பிடுமாறு கோரி தனித்த திரை ஒன்று பயணிக்குக் காட்டப்படும். பயணம் தொடங்கியவுடன் திருப்பத்திற்குத் திருப்பம் Uber வழிகளைக் காட்டும்.
இந்த அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, இந்த வீடியோவைப் பாருங்கள்.
உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்
உதவி மற்றும் ஆதரவு
உங்கள் Uber கணக்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்பதற்கும், சமீபத்திய பயணம் குறித்த பின்னூட்டத்தை வழங்குவதற்கும் எங்களின் உதவி மையத்திற்குச் செல்லுங்கள்.
ஓட்டுநருக்கான உதவி வளங்கள்
மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்குப் பயணம் வழங்குவது குறித்து மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஓட்டுநர்களுக்கான எங்களின் உதவி வளங்களைப் பாருங்கள்.